உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணி: ராகுல்காந்திக்கு பின்னடைவா?

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (08:14 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக அல்லாத சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளதால் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக மக்களவை தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இந்த மாநிலத்தில் அதிக தொகுதியை வெல்லும் கட்சியே மத்தியில் ஆளும் கட்சியாகவும், இம்மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுபவரே பிரதமராகவும் இருந்து வந்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் உபியில் இருந்து மட்டும் பாஜக மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இம்மாநிலத்தில் வலுவான இரு கட்சிகளான சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவும் அகிலேஷ் யாதவ் சம்மதம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை தங்களது கூட்டணியில் சேர்ப்பதால் தங்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் ஓட்டுவங்கி தங்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது என்றும் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்


உபியை அடுத்து வேறு சில மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதால் ராகுல்காந்தியின் பிரதமர் கனவு, கனவாகவே போய்விடும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :