வரும் பாராளுமன்ற தேர்தலை கண்டு பயப்படுகிறதா பாஜக ...?

amith sha
Last Modified சனி, 12 ஜனவரி 2019 (15:55 IST)
வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமித்ஷா பேசியதாவது :
 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 நாடுகள் பிரிட்டிஷாருக்கு அடிமையானதைப் போன்ற நிலைமை ஏற்படும். வரும் பாராளுமன்ற தேர்தல் 3 வது பானிபட் போருக்கு சமம்.
 
யாராலும் மோடியை தோற்கடிக்க முடியாது.  மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் மோடியை வீழ்த்தமுடியாது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :