பாஜக -அதிமுக தீய சக்திகள்….அகற்ற வேண்டும் – சீதாராம யெச்ரூரி

Sinoj| Last Modified வெள்ளி, 5 மார்ச் 2021 (16:49 IST)

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தற்போது திராவிட கட்சிகள் தொடர்ந்து தமது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றானர். ஆனால் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அதேசமயம் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம யெச்சூரி அதிமுக – பாஜக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

பாஜக – அதிமுக ஆகிய தீய சக்திகளை எந்த காலத்திலும்சகித்ஹ்டுக் கொள்ள முடியாது. தற்போது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றானர். எனவே தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்ணியை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :