கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி! – விருப்பமனு அளித்த கார்த்திக் சிதம்பரம்!
கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. முன்னதாக அங்கு காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் பதவி வகித்து வந்த நிலையில் மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்திக் சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளார். அதேசமயம் மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்தும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தி தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளது இதுவே முதன்முறை என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.