1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (15:38 IST)

கார்த்தி படத்தில் பாடிய பிரபல நடிகர் …சுல்தான் பட 2 வது சிங்கில் முக்கிய தகவல்

கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இப்படத்தின் 2 வது சிங்கில் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று பின்வாங்கியது.

இந்நிலையில், இந்தாண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுல்தான் படம் குறித்து ரசிகர்கள் நாள்தோறும் அப்டேட் கேட்டு வருகின்றனர்

ஏற்கனவே இப்படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுல்தான் படத்தின் 2 வது சிங்கில் ரிலீஸ் தேதி .#Sulthan2ndSingleFromMarch5th இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் ஆகிய இருவரின் இசையில் உருவாகியுள்ள 2 வது சிங்கில் “யாரையும் இவ்ளோ அழகா” என்ற பாடல் இன்று மாலை ரிலீசாகவுள்ளது. இந்த அழகான பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இதுகுறித்து ரசிகர்கள் #SilambarasanTR#Sulthan2ndSingle என்ற ஹேஸ்டேர்க் உருவாக்கி வருகின்றனர். இப்பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.