வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (16:43 IST)

’’செல்வராகவன் அற்புதமான இயக்குநர்...புத்திசாலி நடிகர் ’’– கீர்த்தி சுரேஷ் புகழாரம்

இயக்குநர் செல்வராகவன் இன்று தனது பிறந்தநாள் கொண்டாடிவருகிறார். அவருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,இரண்டாம் உலகம் ,ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

இந்நிலையில், இவரது இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ’’நானே வருவேன்’’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிநல்ல வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் செல்வராகவன் கூட்டணி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

நானே வருவேன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என இயக்குனர் அறிவித்துள்ளார். தனுஷ் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்களை முடித்துவிட்டதால் இவை ரிலீஸுக்குத்தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் என்ற கிரைம்  படம் விரைவில் உருவாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுதான். எனவே எதிர்பார்பு அதிகரித்துள்ளது.  இவருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று செல்வராகவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பிறந்தநாள் பரிசாக சாணிக்காயிதம் படக்குழு, செல்வராகவனின் புதிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது. தற்போது இது வைரலாகிவருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், , சாணிக்காயிதம் என்ற கிரைம் படத்தில் என் பார்ட்னராக நடிக்கும் அற்புதமான இயக்குநர் மற்றும் புத்திசாலியான நடிகர் செல்வராகவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.