தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமா?
- சென்னை காமராஜர் சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: அதிரடி அறிவிப்பு!
- இன்னைக்கு பீச் லீவு.. தூரத்துல இருந்துதான் பாக்கணும்! – சென்னை காவல்துறை வைத்த ட்விஸ்ட்!
- தங்கம் விலை இன்று திடீர் சரிவு...சென்னையில் இன்றைய நிலவரம்!
- காணும் பொங்கலுக்கு வெளியே செல்லும் மக்கள்! – சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள்!
சென்னை திரும்பும் பொதுமக்கள்.. சுங்கச்சாவடியில் இலவச அனுமதி!
பொங்கல் விடுமுறைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பி கொண்டு இருப்பதால் பெரும் போக்குவரத்தினருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நீண்ட வரிசை நிற்பதை அடுத்து பரனுர் உள்பட ஒரு சில சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணங்கள் பெறாமல் வாகனங்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையின் புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் விடுமுறை கடந்த 12ஆம் தேதியிலிருந்து விடப்பட்ட நிலையில் இன்று பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற அனைவரும் சென்னை திரும்பி வருகின்றனர் என்பதும் நாளை முதல் சென்னையில் இயல்பு வாழ்க்கை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
