1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (07:53 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் இறக்குமதி செய்த காரணத்தினால் தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது 
 
Edited by Siva