1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:33 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு சைக்கிள் பரிசளிப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 100 நாட்கள் கடந்துள்ளது. எனவே எதிர்ககட்சியினர் விமர்சனங்கள் பெற்றாலும் அனைவராலும் திமுகவின் திட்டங்கள் கவனிக்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வரும் திமுகர் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின்  – துர்கா ஸ்டாலின் இன்று தனது 46 திருமண நாளைக் கொண்டாடுகின்றனர் .எனவே இணையதளத்தில் திமுகவினரும் மக்களும், அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது திருமண நாளான இன்று பிரபல TI சைக்கிள் நிறுவனம் மின்சார சைக்கிளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.