எங்களின் அடுத்த இலக்கு வங்கிகள் தான்.. ஈரான் அறிவிப்பால் வளைகுடா நாடுகள் பதட்டம்..!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உயரிய மதகுரு கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையினால் சர்வதேச நிதி மையங்களாக திகழும் துபாய், சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு வளைகுடா நாடுகளின் பொருளாதார சூழலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
Edited by Siva