திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (08:23 IST)

தேர்தல் ரெய்டு: 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் !

தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் என தகவல். 

 
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த தேர்தல்கள் வரை அதிக அளவில் பணம் வைத்துள்ளவர்களை கண்காணித்து வந்து, தற்போது வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதுதவிர ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் எடுக்கப்படும் வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.