வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (11:00 IST)

தமிழகம் வரும் ராகுல் - 3 நாள் ப்ளான் என்ன??

தமிழகம் வரும் ராகுல் காந்தியின் மூன்று நாள் தேர்தல் பிரச்சார பயண திட்டம் வெளியாகியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் அவ்வபோது தமிழகத்திற்கு தேர்தல் காரணமாக வர தொடங்கியுள்ளனர்.  
 
சமீபத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காண மதுரை வந்த ராகுல்காந்தி தற்போது மீண்டும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் தமிழகம் வரும் அவர் 25 ஆம் தேதி பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  
 
இதனிடையே ராகுலின் இந்த பயணத்துக்கு "ராகுலின் தமிழ் வணக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது. நண்பகல் 11 மணி அளவில் தமிழகம் வந்தடைகிறார் ராகுல். பின்னர் சிறு, குறு தொழில்முனைவோருடன் சுகுணா அரங்கில் மதிய உணவுடன் கலந்துரையாடுகிறார்.
 
பின்னர், மாலை 3.30 மண அளவில் திருப்பூர் சென்றடையும் ராகுல் காந்தி 4 மணி அளவில் திருப்பூர் அனுப்பார்பாளையம் செல்கிறார். அங்கிருந்து மாலை 5 மணி அளவில் கொடிகாத்த திருப்பூர் குமரனின் நினைவிடம் சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். 
 
மாலை 5.45 மணிக்கு ராமசாமி முத்தம்மாள் திருமண மாளிகையில் தொழில்துறையினருடன் கலந்துரையாடிய பின், அன்றிரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறையின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
 
மறுநாள் காலை ஈரோடு செல்லும் ராகுல் காந்தி அம்மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 25 ஆம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதன் பின் தனது மூன்று நாள் சுற்றப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.