வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 மே 2021 (16:42 IST)

மோடியின் காலில் விழத் தயார்- முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்திற்கு உதவுவதற்கு என் காலில் விழ வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தால் நான் நிச்சயம் அப்படிச் செய்திருப்பேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை உடன் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய யாஷ் புயல் பாதிப்புகள்  ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று மேற்கு வங்கத்திற்கு வந்த பிரதமர் மோடியைச் சந்தித்து 15 நிமிடங்கள் பேசினார்.

ஆனால், ஆயத்தம் செய்யப்பட்டிருந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே முதல்வர் மம்தா பானர்ஜி வெளியேறினார். இதற்கு அம்மாநில  கவர்னர் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த ஆய்வுக் கூட்டம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யவில்லை; மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து வருகிறது.  இம்மாநிலத்தில் மட்டும் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜக, திரிணாமுள் கட்சிக்கு இடையே மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.