தொடர்புடைய செய்திகள்
இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் – அம்பானியை நெருங்கிய அதானி !
போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக அளவில் மற்றும் நாடுகளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 12 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 3,65,100 கோடி ரூபாயாக உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆண்டு இவர் 10 ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
