இந்திய பணக்காரர்களில் அம்பானி தொடர்ந்து முதலிடம்..

Arun Prasath| Last Updated: சனி, 12 அக்டோபர் 2019 (10:56 IST)
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளதாக உலக வணிக பத்திரிக்கை ஒன்று தனது பட்டியலில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ், 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு 5,140 கோடி டாலர் எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த பட்டியலில் இரண்டாவதாக கவுதம் அதானி முன்னேறியுள்ளதாகவும் அவரது சொத்து மதிப்பு, 1,570 கோடி டாலராக உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இந்துஜா பிரதர்ஸ், பலோன்ஜி மிஸ்திரி ஆகியோரும் முதல் பத்தில் இடம்பிடித்துள்ளனர்.

பங்குச்சந்தைகள் கடும் ஏற்றத்தாழ்வுகளை கண்டு வரும் நிலையிலும், ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ள இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :