1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Assembly Speaker appavu question governor activity

கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!

Tamilnadu
நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து விளக்க கடிதத்தை பொதுவெளியில் பகிர்வது சரியா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பேசிய சபாநயகர் அப்பாவு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியது குறித்த கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலா என ஆளுனருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எந்த ஆளுனரும் இதை செய்ததில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆளுநர் பற்றி பேச கூடாது - சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு!