ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:14 IST)

மார்பக அளவை குறைக்க க்ரவுட் பண்டிங் மூலம் நிதி சேர்க்கும் இளம்பெண்!

இங்கிலாந்தைச் சேர்ந்த கார்லி ஸ்மார்ட் என்ற பெண் தனது பெரிய மார்பகங்களால் பல உடல் அவதிகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை செய்துவரும் கார்லி ஸ்மார்ட் தனது மிகப்பெரிய மார்பகங்களால் அதிகமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரின் மார்பகங்கள் மட்டும் 9 கிலோ எடை கொண்டதாக இருக்க, அவருக்கு முதுகுவலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட் வேலை செய்யும் இடத்திலும் பல கேலிக்கும் இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளார்.

இதனால் மருத்துவர்களிடம் சென்று தனது மார்பகங்களை சிறியதாக்கும் அறுவை சிகிச்சை செய்ய சென்றுள்ளார். ஆனால் சிகிச்சைக்கான செலவு அதிகமாகும் என மருத்துவர்கள் சொல்ல, அதற்கான தொகையை கிரவுட் பண்டிங் மூலமாக சேர்த்து வருகிறார்.