1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று சட்டமன்ற சிறப்புக்கூட்டம்!

நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நிலையில் அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார் 
 
இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அவர் திருப்பி அனுப்பிய நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்
 
இன்று காலை 10 மணிக்கு கூடும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் இந்த மசோதா மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்றைய பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது