தொடர்புடைய செய்திகள்
- இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்.பி.,
- தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு -முதல்வர் மு.க.ஸ்டாலின்
- செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தும் அண்ணாமலைக்கு WJUT கடும் கண்டனம்!
திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அருள் ஆறுமுகம்
திமுக ஆளும் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்றும் ஏனென்றால் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலைக்கு எதிராக அவ்வளவு தீவிரமாக போராடியது திமுக தான் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக என்றும் ஆளுங்கட்சியானதால் திமுக அரசு விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
மேலும் தான் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா இல்லை வேறு ஏதேனும் ஆட்சி நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுதுவது என்றும் சிப்காட்டுக்கு எதிராக போராடியதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது என்றும் அவர் கூறினார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
