செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (19:23 IST)

தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு -முதல்வர் மு.க.ஸ்டாலின்

cm stalin, pm modi
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார் சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள்,  துரைமுருகன்,  சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின், நேரு உள் விளையாட்டு அரங்கில்,  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை  பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது: ‘’2024 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறைக்கு சிறப்பான தொடக்கமான அமைந்துள்ளாது, தமிழ் நாடு,மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற  உணர்வை ஏற்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேசிய இளையோர் விளையாட்டு தொடர் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக நிலை நிறுத்துவது நமது குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  மணிப்பூர் பிரச்சனையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து பயிற்சி கொடுத்தோம். அவர்களில் சிலர் இந்த கேலோ தொடரில் பங்கேற்கின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது  எப்படி தமிழ் நாட்டின்  இலக்கோ, அதேபோல் விளையாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது, டிடி பொதிகை சேனல், ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு, தமிழின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.