புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 20 ஜனவரி 2024 (14:42 IST)

சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanithi
திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-ஆவது மாநில மாநாடு சேலத்தில்  நாளை நடைபெறவுள்ள நிலையில் INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் பிரமாண்டமாக நடக்கிறது.

இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர்.

அங்கு கே.என். நேரு சார்பில் இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகின்றனர். பின்னர்,  சென்னையில் இருந்து புறப்பட்ட சுடர் தீபம் ஒப்படைக்கப்படுகிறது.

மா நாட்டில் தொடக்க நிகழ்ச்சியாக நாளை காலை 9 மணிக்கு  திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி பேசுகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ’’சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!

லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞரணி-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.

#INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம்.

அனைவரும் வருக!’’என்று தெரிவித்துள்ளார்.