1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ariyalur students admitted in hospital

கள்ளிப்பால் குடித்த 5 மாணவர்கள்.. ஆசிரியர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

அரியலூர்
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாததால் வெளியே விளையாட சென்ற ஐந்து மாணவர்கள் கள்ளிச்செடியிலிருந்து வரும் பாலை குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன. 
 
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் என்ற பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வரும் நிலையில் இன்று ஆசிரியர்கள் போராட்டம் என்பதால் மாணவர்கள் வெளியே சுற்றி இருந்தனர் 
 
இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே இருந்துள்ள  நிலையில் வெளியே சென்ற மாணவர்கள் கள்ளிச்செடியிலிருந்து வந்த பாலை குடித்ததை அடுத்து உடல் நல குறைவால் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கள்ளிச்செடியை உடைத்து அதிலிருந்து வெளியேறிய பாலை ஆச்சரியமாக பார்த்து அந்த பாலை சுவைத்ததாகவும் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துங்கள்: மம்தா பானர்ஜியின் சர்ச்சை பேச்சு..!