1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:21 IST)

பேருந்தில் உயிரிழந்த நபர்.. சடலத்துடன் உறவினர்களை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர்..!

விழுப்புரம் அருகே பேருந்தில் பயணம் செய்த நபர் திடீரென உயிரிழந்த நிலையில் அந்த சடலத்துடன் ன் அவருடன் வந்தவர்களையும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நள்ளிரவில் நடுரோட்டில்  இறக்கி  விட்டு சென்ற சம்பவம் விழுப்புரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 60 வயது நபர் பயணம் செய்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இதனை எடுத்து அவருடன் வந்தவர்கள் ள் கதறி அழுத நிலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சடலத்துடன் அவருடன் வந்தவர்களை கீழே இறங்குமாறு கூறினர்.

நள்ளிரவில் இந்த இடத்தில் நிறுத்தினால் எப்படி என்று இறந்த நபரின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தும் உடன்வந்த இருவரையும் சடலத்துடன் நடுவழியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இறக்கி விட்டதாக தெரிகிறது.

இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த பேருந்து ஓட்டுனர் ராம்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் நடத்தின ரசூல் ரகுமான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்தபோது இறந்த   நபரின் பெயர் பீமா மண்டாவி என்றும் 60 வயதான அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவருடன் அசோக் குமார் மற்றும் கஜுனு ஆகிய இருவரும் வந்திருந்த நிலையில் திடீரென பீமா திடீரென மாரடைப்பு காரணமாக இறந்து உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Edited by Siva