செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (13:10 IST)

சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! மாணவர்கள் அதிர்ச்சி..!

சென்னை உள்பட தமிழக முழுவதும் கல்வி நிலையங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் இன்று காலை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

சோதனை முடிந்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்ததை அடுத்து மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அண்ணா பல்கலையிலும் அதே போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் சென்ற விமானம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல இடங்களில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran