செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:55 IST)

மாணவர்கள் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு..! பாஜக எம்பி சர்ச்சை பேச்சு.!!

BJP MP
மாணவர்கள் தங்களது பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு உள்ளது என்று பாஜக எம்பி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்திரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த கோவிந்த் கர்ஜோல் உள்ளார்.  கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி  ஆசிரியர் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீப காலமாகப் பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்த வித தவறும் இல்லை என்று அவர் கூறினார். ஜப்பான் நாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கின்றனர் என்றும் நான் படிக்கும் சமயத்தில் பள்ளியின் விடுதியை பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
மாணவனின் கையில் ஆசிரியர் துடைப்பத்தை கொடுப்பதை குற்றமாக கூறினால், சுத்தம் செய்யும் வேலை என்பது கீழான செயல் என்று மாணவனுக்கு எண்ணம் ஏற்படும் என்று கோவிந்த் கர்ஜோல் தெரிவித்தார். இவரது சமீபத்திய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.