1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annapoorani says about her husband dead

என் கணவர் இறந்தது எப்படி? அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி!

அன்னபூரணி
தன்னைத்தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கும் பெண் சாமியார் அன்னபூரணி குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவரது கணவர் எப்படி இறந்தார் என்பதை அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
எனது கணவர் மாரடைப்பில் தான் இறந்தார் என்றும் அவர் இறந்ததை மர்ம மரணம் என்று சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்றும் அவ்வாறு தயவு செய்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் 
 
மேலும் என்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று நான் கூறிக் கொண்டதில்லை என்றும் மக்கள் அவ்வாறு கூறினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் எனக்கும் என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்றும் எனது ஆன்மீக சேவை குறித்து இணையத்தில் தவறான தகவல்கள் பரவுகிறது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார் அன்னபூரணி இந்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜவுக்கு ராமர் என்றால் எங்களுக்கு அனுமர்: அகிலேஷ் யாதவ்