திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (11:30 IST)

அருள்வாக்கு அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

அருள்வாக்கு அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!
தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கும் அன்னபூரணி என்ற பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அருள்வாக்கு அன்னபூரணி என்பவரது புகைப்படம் மற்றும் செய்திகள் வைரல் ஆகி வருகின்றன. இவர் தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்பதும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பொது மக்களுக்கு அருள்வாக்கு கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் காவல்துறையின் அனுமதி இன்றி அருள்வாக்கு கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக அருள்வாக்கு அன்னபூரணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த நிலையில் அருள்வாக்கு அன்னபூரணி போலி சாமியார் என பலர் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது