வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (15:41 IST)

பாஜவுக்கு ராமர் என்றால் எங்களுக்கு அனுமர்: அகிலேஷ் யாதவ்

பாஜகவுக்கு ராமர் என்றால் எங்களுக்கு அனுமர் என்று முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர இருப்பதை அடுத்து காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் இந்துமத வாக்குகளை பெறுவதற்காக அனுமர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். பாஜக எப்படி ராமர் மற்றும் ராமர் கோவிலை கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறதோ அதே போல் அகிலேஷ் ஹனுமர் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மொத்தத்தில் தேர்தல் அரசியலில் கடவுள் படும்பாடு பெரும்பாடாக உள்ளதாக பொதுமக்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்