ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (14:02 IST)

உயிருக்கு ஆபத்து... திடீர் சாமியார் அன்னபூரணி புகார்!

உயிருக்கு ஆபத்து என காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் வந்து புகார். 

 
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்னபூரணி திடீரென தன்னைத்தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார். இந்நிலையில் காவல் துறையின் அனுமதியின்றி அருள்வாக்கு கூறும் கூட்டத்தை கூட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிகிறது. கசிந்துள்ள தகவலின்படி அருள்வாக்கு அன்னபூரணியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன  என கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனிடையே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் வந்து தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். வாட்ஸ் -அப் மூலமும் செல்போன்கள் மூலமும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அன்னபூரணி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.