1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai university exam postponed

அண்ணா பல்கலையை அடுத்து அண்ணாமலை பல்கலையின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Annamalai University
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை அதாவது டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒத்தி வைக்கப்படும் தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!