மாண்டஸ் புயல் எதிரொலி.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
வங்ககடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran