வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (10:31 IST)

புதிய கல்வி கொள்கையில் என்ன தவறு? அமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படமாட்டாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில் புதிய கல்விக் கொள்கைகள் என்ன தவறு கண்டீர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டது என்பதும் அதில் பல மாநிலங்கள் அந்த கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்திலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திமுக ஆட்சி மாறியவுடன் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள், 6600 வட்டங்கள், 6000 நகர்ப்புற 
உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகள் பெறபட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் ஆலோசனைகளுடன் வடிவமைக்கப்பட்டது. பதில் சொல்லுங்க என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.