1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendra
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (20:32 IST)

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது என்பதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது என்பதும் தெரிந்ததே 
 
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொண்டு இருந்த நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என திமுக அரசு அறிவித்துள்ளது
 
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த போவதில்லை என ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார்
 
மேலும் மாநிலத்திற்கு கல்விக் கொள்கையை வகுத்து கல்வியாளர்கள் அடங்கிய குழு விரைவில் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டோம் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது