திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (07:07 IST)

அண்ணாமலை பாதயாத்திரை இன்று மீண்டும் தொடக்கம்.. மத்திய அமைச்சர் பங்கேற்பு..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பாத யாத்திரை       ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்       பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘’என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது.
 
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் வாக்குவங்கியை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva