1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (12:04 IST)

தலைநகர் கொலைநகராக மாறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி

Edappadi
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் கடந்த இருபத்தி எட்டு நாட்களில் சென்னையில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளது என்றும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
 
சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு  கேள்விகுறியாகி இருக்கிறது,
 
காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.