1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (11:20 IST)

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்… வெளியான தலைப்பு & முதல் லுக் போஸ்டர்!

சிவாஜி குடும்ப கலைவாரிசுகளில் ஒருவரான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார்.

கும்கி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக சமீபத்தில் அவர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் போக்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்து, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது.

இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு அடுத்ததாக புதுமுக இயக்குனர் ஹரேந்தர் இயக்கும் ‘இரத்தமும் சதையும்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.