திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (14:29 IST)

ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி..!

ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட  ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. 
 
இன்னும் 125 நாட்களில் எல் 1 புள்ளியை அடைந்து சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும்.நிலவைத் தொடர்ந்து சூரியனையும்  வெற்றிகரமாக ஆய்வு செய்யும்  இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். சூரியன் குறித்த உண்மைகளையும் உலகிற்கு சொல்லும் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Edited by Mahendran