வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (10:51 IST)

இன்னும் ஒரு மணி நேரத்தில் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்1.. உலக நாடுகள் ஆச்சரியம்..!

இன்னும் ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று காலை 11:50 மணிக்கு சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெண்கலம் ஏவப்பட இருப்பதை அடுத்து உலக நாடுகள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 
 
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தர இறங்கி ஆய்வு செய்து வருகிறது. விக்ரம் லேண்டர் அனுப்பும் ஆச்சரியமான சில தகவல்கள் உலகையே அதிசயத்தக்க வகையில் உள்ளது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று காலை 11 50 மணிக்கு பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. 
 
1480 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் அனுப்பப்படுகிறது. இந்தியா அனுப்பும் முதல் சூரியனை கண்காணிக்கும் விண்கலம் என்பதால் உலக நாடுகள் இந்தியாவையும் இந்திய விஞ்ஞானிகளையும் ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
 
இந்த விண்கலம்  வெற்றிகரமாக செயல்பட்டால் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் கால நிலை ஆகியவை குறித்த பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran