1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (13:32 IST)

நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம்.. இன்று விஞ்ஞானிகள் திருப்பதியில் பூஜை..!

நாளை சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் நிலையில் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். 
 
சந்திரனை ஆய்வு செய்ய சந்திராயன் 3 என்ற விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாளை சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலம் அனுப்பப்பட உள்ளது. 
 
இந்த விண்கலம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக  இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சந்திராயன் 3 போலவே ஆதித்யா எல்ஒன் விண்கலமும் வெற்றிகரமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva