1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (11:56 IST)

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா எல்1 விண்கலம்.. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11:50 மணிக்கு செலுத்தப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 
 
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் சீறி பாய்ந்தது. சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவில் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 விண்கலத்தை இந்த செயற்கைக்கோள் சுமந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஆதித்யா எல் 1 விண்கலம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் படிப்படியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகி வருவதாகவும்  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran