செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (15:01 IST)

ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!

சென்னையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து இரண்டு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் சென்னையிலும் பல பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கிளையில் பணிபுரிந்த நான்கு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ஆனந்தபவனின் சென்னையில் உள்ள இரு கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.