பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி! – உதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் த.வா.க வேல்முருகன் போட்டியிடும் தொகுதி உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், திமுக அளிக்கும் தொகுதிகளை நிபந்தனைகளின்றி பெற்று கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் த.வா.க வுடன் பேச்சுவார்த்தை நடத்திய திமுக பண்ருட்டி தொகுதியை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. பண்ருட்டி தொகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் த.வா.க கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் த.வா.க ஒத்துக் கொண்டுள்ளது.