1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (13:30 IST)

அந்த கட்சியில் இணைந்தால் எல்லாம் கிடைக்கும்! – பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல காமெடி நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80கள் முதலாக பிரபலமாக இருந்து வந்தவர் காமெடி நடிகர் செந்தில். கவுண்டமணியுடனான இவரது காமெடி காட்சிகள் பிரபலமானவை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் செந்தில் படங்கள் ஏதும் நடிக்காத சூழலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை அதிமுக ஆதரவாளராக இருந்து வந்தார் செந்தில். தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் செந்தில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாஜகவில் இணைந்தால் எல்லாம் கிடைக்கும். தரமான கட்டமைப்பு வசதிகள், நல்லாட்சி உள்ளிட்டவை கிடைக்கும்” என கூறியுள்ளார்.