செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (13:14 IST)

சீட் இல்லைன்னாலும் பரவாயில்ல.. திமுகவுக்கு ஆதரவு! – தமிமுன் அன்சாரியின் ஒரேயொரு கோரிக்கை?

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிமுன் அன்சாரி கோரிக்கை ஒன்றையும் திமுகவிற்கு விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுகவில் ஏறத்தாழ அனைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முடிந்துள்ள சூழலில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சி ஆகியோர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் சீட் கிடைக்காத நிலையில் ஆதரவை கருணாஸ் வாபஸ் பெற்ற நிலையில் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் சீட் கிடைக்காதது வருத்தம்தான் எனினும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என கூறியுள்ள அவர், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்