செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (12:33 IST)

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! – எந்தெந்த தொகுதிகள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தனித் தொகுதிகளில் பவானிசாகர், வால்பாறை, திருத்துறைப்பூண்டி தொகுதிகளும், பொதுவில் சிவகங்கை, திருப்பூர் வடக்கு, தளி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.