ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:23 IST)

யாருடன் கூட்டணி..? 2 நாட்களில் நல்ல செய்தி வரும்..! நடிகர் கமல்

kamal
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல செய்தியோடு செய்தியாளர்களை சந்திப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி  தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி செல்வார்கள் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு  நாள் எழுந்து வருகிறது.
 
திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக இன்னும் தங்களது கூட்டணியை அறிவிக்கவில்லை
 
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
 
மக்கள் நீதி மய்யத்திற்கு கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியோடு கமல்ஹாசன் நேரடியாக கூட்டணி வைக்காமல், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார்.


அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமலஹாசன், இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன் என்றும் நான் அங்கிருந்து செய்தி கொண்டு வரவில்லை என்றும் இங்கிருந்து தான் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.