திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (13:06 IST)

பாஜகவில் இணைகிறேனா..? காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சூசக தகவல்..!

vijayadharani
பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது
 
இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

 
பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு விஜயதாரணி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அதேசமயம், பாஜகவில் இன்று இணைய வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளதால், வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் அவர் சேரலாம் என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.