1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (20:12 IST)

அதிமுகவில் இணைந்த கௌதமிக்கு அட்வைஸ்..! ராஜபாளையம் சீட்.! SECTRET-டை உடைத்த அண்ணாமலை..!

annamalai
ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல என்று தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்தார்.
 
சென்னையில் பேசிய அண்ணாமலையிடம், தேர்தல் நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி நடிகை கௌதமி உட்பட ஒரு சிலர் அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், தேர்தலின் போது ஒரு சிலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் தான் என கூறினார். 
 
உறுதியளித்தபடி ராஜபாளையத்தில் சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்ததாக நடிகை கௌதமி சொன்னதாகவும், அதிமுக கூட்டணியில் இருந்த போது ராஜபாளையம் தொகுதியை பாஜக கேட்டது, ஆனால் அந்த தொகுதியை அதிமுக கொடுக்கவில்லை என்பதை கௌதமியிடம் நான் எப்படி சொல்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது என்றும் அவர் கூறினார்.

 
பிரதமர் வருவதற்கு முன்பு பாஜகவில் நிறைய பேர் இணையுள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல என்று தெரிவித்தார்.