1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. all pass to 1st std to 9th std in pudhucherry

இந்த ஆண்டும் ஆல்பாஸ்: அதிரடி அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

student
புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வு நடத்தாமல் ஆல்பாஸ் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது 
 
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றாலும் அனைவரையும் ஆல்பாஸ்  செய்ய வேண்டுமென புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 
எனவே இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம்; தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு!