1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:00 IST)

திமுக தான் முதல் எதிரி: அண்ணாமலையிடம் கூறிய அமித்ஷா!

Amitshah
திமுக தான் பாஜகவுக்கு முதல் எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
சமீபத்தில் புதுவை வந்த அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை இடம் தமிழகத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாகவும் அதுகுறித்து கவனிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது.
 
மேலும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளில் விடுதலை புலிகள் ஊடுருவல் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் தமிழகத்தை பொருத்தவரை நமக்கு திமுக தான் நம்பர் ஒன் எதிரி என்றும் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துங்கள் என்றும், அதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது